Saturday, 28 July 2012

முதலில் மங்களகரமாக ஒரு யோகத்தை கற்போம். பாடம் 1 8056156496

ஹம்ஸ யோகம்: 
************************** 
குரு - குரு பகவானை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். குரு தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கடக ராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு. 
பலன்கள்:
*************** 
1. மிகுந்த அதிர்ஷ்டசாலி.
2. வாழ்க்கையில் லக்‌ஷ்மி தேவியின் கடைக்கண் பார்வை உள்ளவன் எல்லா நலன்களும் அவனைத் தேடி வரும். 
3.இறை நம்பிக்கை உள்ளவன். 

இனி அடிப்படையிலிருந்து கற்போம். பாடம் - 1
இனி வருகிற குறிப்புகள் ஆருடம் பார்க்கவும் கூட உதவும்,எனவே கவனமாக மனப்பாடம் செய்துகொள்ளுங்கள்.
ஜோதிடம் டிப்ஸ்:1
சுக்கிர பலத்தை விட குரு பலம் கூடிப்போச்சுன்னா பலான தாம்பய உணர்வில் ஆர்வம் குறைஞ்சுரும். குரு பலத்தை விட சுக்கிர பலம் கூடிப்போச்சுன்னா ஆர்வம் அதிகமாக இருக்கும்.
முதலில்  
ஜோதிடம் என்றால் என்ன?
***************************************** 
1.ஜ்யோதிஷம் என்ற வடமொழிச்சொல்லின் தமிழ்வடிவம் ஜோதிடம்
2.வானமண்டலத்தில் இருக்கிண்ற கிரகங்கள் எவ்வாறு பிரபஞ்சத்தில் பூமியில் இருக்கின்ற மனிதர்கள் மீதும் உயிர்கள் மீதும் ஜடப்பொருட்கள் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றன,அதனால் என்னென்ன நிகழப்போகின்றன அதை முன்கூடியே தடுக்கதக்க பரிகாரங்கள்என்பதை அறியும் கலை. 
ராசிகள் பற்றிய விவரங்கள்:
ராசி மண்டலம் என்றால் என்ன?
வான மண்டலத்தில் சூரியன் சுற்றி வரும் 360டிகிரி கொண்ட வட்ட வடிவ அல்லது முட்டை வடிவ பாதை
இதுவே வான் மண்டல தொகுதி அல்லது ராசி மண்டல தொகுதி எனப்படுகிறது 
ராசி என்றால்:
********************** 
1.12 பகுதிகளாக பிரிக்கப்பட்ட பூமியைச்சுற்றியுள்ள வான வெளி யின் மாபெரும் வட்டம்
2. 
 2.பிரிக்கப்பட்ட இந்த பகுதிகள்தான் ராசிகள்
3.ஒரு ராசிக்கு 30 பாகை 
ராசிகள் எத்தனை? :
****************************** 
 12
1.மேஷம்
2.ரிஷபம்
3.மிதுனம்
4.கடகம்
5.சிம்மம்
6.கன்னி
7.துலாம்
8.விருச்சிகம்
9.தனுசு
10.மகரம்
11.கும்பம்
12.மீனம்
  
ராசிகளின் ரகசியங்கள்:
************************************ 
1. பஞ்ச பூதங்களும் ராசிகளும்
******************************************* 

நெருப்பு - மேஷம், சிம்மம்,தனுசு
நிலம் - ரிஷபம்,கன்னி,மகரம்
காற்று - மிதுனம்,துலாம்,கும்பம்
நீர் - கடகம்,விருச்சிகம்,மீனம் 
இதை எளிதில் ஞாபகம் வைத்துக்கொள்ள 12 கட்டம் வரைந்தால் அதில்  எப்போதும் மேஷத்தை முதலாக வைத்து எண்ன வேண்டும்.அப்படி எண்ணும்போது இந்த வரிசயில் 4 பூதங்களையும் குறிப்பிட வேண்டும்.

2.பஞ்ச பூத சூத்திர வரிசை: நெருப்பு,காற்று,நிலம்,நீர்
*************************************************************************** 
 இப்போது மேஷத்திலிருந்து வரிசையாக 
 நெருப்பு ,நிலம் காற்று,நீர்
 நெருப்பு ,நிலம் காற்று,நீர்
 நெருப்பு ,நிலம் காற்று,நீர்
 நெருப்பு ,நிலம் காற்று,நீர்
முதல் ராசி நெருப்பென்றால் அடுத்த ராசி நிலம்,அடுத்தது காற்று அடுத்தது நீர்


அதாவது இப்படியே மனதில் நினைவு வைத்துகொள்ளலாம்
 நெருப்பு ,நிலம் காற்று,நீர்
 நெருப்பு ,நிலம் காற்று,நீர்
 நெருப்பு ,நிலம் காற்று,நீர்
 நெருப்பு ,நிலம் காற்று,நீர்
முதல் ராசி நெருப்பென்றால் அடுத்த ராசி நிலம்,அடுத்தது காற்று அடுத்தது நீர்


அதாவது இப்படியே மனதில் நினைவு வைத்துகொள்ளலாம
இனிவருகிற விஷயங்கலை இப்படியே ஃபார்முலாவாக்கி நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

3. ராசியின் பாலினம்
**************************** 
பாலின சூத்திரம் ஆண்,பெண்
******************************************** 
- முதலாவது ஆண் அடுத்த ராசி பெண்
மேஷம் ஆண்,ரிஷபம் பெண் என தொடரும் 
4.ராசியின் இயக்கநிலை:
*********************************** 
சூத்திரம் : சரம்,ஸ்திரம்,உபயம்
********************************************** 
அப்போ வழக்கமா? முதல் ராசி மேஷத்திலிருந்து தொடங முதல்ராசி சரம் அடுத்தது ஸ்திரம்,அடுத்தது உபயம் 
5.ராசியின் திசைகள் 
****************************** 
சூத்திரம் - கிழக்கு தெற்கு மே ற்குவடக்கு
************************************************************ 
அப்போ வழக்கமா? முதல் ராசி மேஷத்திலிருந்து தொடங முதல்ராசி 
அப்போ வழக்கமா? முதல் ராசி மேஷத்திலிருந்து தொடங முதல்ராசி கிழக்கு  

 
ராசியின் அங்கங்கள்:
மேஷம் - தலை
 [மூளை,முடி,மண்டை]
ரிஷபம் - முக,வாய் ,கழுத்து
 [நெற்றி,ப்ருவம்,கண்,கன்னம், உதடு,மீசை,தாடி,குரல்வளை]
மிதுனம் - தோள் பட்டை ,கைகள்
 கடகம் - மார்பு
[இதயம்,நுரையீரல்,முலை,நெஞ்செலும்பு] 
 சிம்மம் - தொப்புள்,மேல் வயிறு,உதரவிதானம்
[ நடு வயிறு,முதுகு தண்டு,தண்டு வடம்]
கன்னி - அடி வயிறு
[கல்லீரல்,மண்ணீரல்,சிறுகுடல்,
துலாம் - மர்ம உறுப்புகள்
[சிறு நீரகம்,சினைப்பை,இடை எலும்புகள் ] 
 விருச்சிகம் - குதம்,பிருஷ்டம்,மல்க்குழாய்
தனுசு - தொடை
 மகரம் - முழங்கால் மூட்டு
கும்பம் - கணுக்கால்
மீனம் - பாதம் 

ஜோதிடம் டிப்ஸ் -2

ராசி சந்தியில் உள்ள கிரகம் எவ்வளவு வலுவுடையதானாலும் அதன் தசையில் பலன் தராது. 

Friday, 27 July 2012

ஓம்
***
ஓம் சங்கடம் தீர்க்கும் கணபதி வருவாய் 
சக்தியின் மகனே சபையினில் எழுவாய் 
கங்கண கண கண கணபதி உன்றன் 
மங்கள அடிகள் எங்களுக்கருள்வாய்

நண்பர்களே உங்களோடு சேர்ந்து கற்றுக்கொள்ளவே நானும் ஜோதிட வழிமுறைகளை எழுதப்போகிறேன்.இப்போதைக்கு ஜோதிட அடிப்படைகளையும் உண்மைகளையும் கற்றுக்கொள்ளுங்கள்,பின்னாலில் அவை விரிவான கற்றலுக்கு உதவியாக இருக்கும்.